|
17.
அழுக்காறாமை - திருக்குறள்
|
|
| 1. |
ஒழுக்காறாக்
கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. |
 |
|
2. |
விழுப்பேற்றின்
அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். |
 |
|
3. |
அறன்ஆக்கம்
வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். |
 |
|
4. |
அழுக்காற்றின்
அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. |
 |
|
5. |
அழுக்காறு
உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது. |
 |
|
6. |
கொடுப்பது
அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். |
 |
|
7. |
அவ்வித்து
அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். |
 |
|
8. |
அழுக்காறு எனஒரு
பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். |
 |
|
9. |
அவ்விய
நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். |
 |
|
10. |
அழுக்கற்று
அகன்றாரும் இல்லை:அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |