|
19.
புறங்கூறாமை - திருக்குறள்
|
|
| 1. |
அறங்கூறான்
அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. |
 |
|
2. |
அறன் அழீஇ
அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை. |
 |
|
3. |
புறங்கூறிப்
பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும். |
 |
|
4. |
கண்நின்று
கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல். |
 |
|
5. |
அறஞ்சொல்லும்
நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும். |
 |
|
6. |
பிறன்பழி
கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். |
 |
|
7. |
பகச்சொல்லிக்
கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். |
 |
|
8. |
துன்னியார்
குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு? |
 |
|
9. |
அறன்நோக்கி
ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை? |
 |
|
10. |
ஏதிலார்
குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |