|
20.
பயனில சொல்லாமை -
திருக்குறள்
|
|
| 1. |
பல்லார் முனியப்
பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். |
 |
|
2. |
பயன்இல
பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது. |
 |
|
3. |
நயன்இலன் என்பது
சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை. |
 |
|
4. |
நயன்சாரா
நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. |
 |
|
5. |
சீர்மை
சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை யுடையார் சொலின். |
 |
|
6. |
பயன்இல்சொல்
பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல். |
 |
|
7. |
நயன்இல
சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று. |
 |
|
8. |
அரும்பயன் ஆயும்
அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். |
 |
|
9. |
பொருள்தீர்ந்த
பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். |
 |
|
10. |
சொல்லுக
சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |