|
21.
தீவினையச்சம் -
திருக்குறள்
|
|
| 1. |
தீவினையார்
அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. |
 |
|
2. |
தீயவை தீய
பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். |
 |
|
3. |
அறிவினுள்
எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். |
 |
|
4. |
மறந்தும்
பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. |
 |
|
5. |
இலன்என்று தீயவை
செய்யற்க: செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. |
 |
|
6. |
தீப்பால
தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். |
 |
|
7. |
எனைப்பகை
உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். |
 |
|
8. |
தீயவை செய்தார்
கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. |
 |
|
9. |
தன்னைத்தான்
காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். |
 |
|
10. |
அருங்கேடன்
என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |