|
23.
ஈகை -
திருக்குறள்
|
|
| 1. |
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. |
 |
|
2. |
நல்ஆறு எனினும்
கொளல்தீது மேலுலகம்
இல்எனினும் ஈதலே நன்று. |
 |
|
3. |
இலன்என்னும்
எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள. |
 |
|
4. |
இன்னாது இரக்கப்
படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு. |
 |
|
5. |
ஆற்றுவார்
ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். |
 |
|
6. |
அற்றார் அழிபசி
தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. |
 |
|
7. |
பாத்தூண் மரீஇ
யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. |
 |
|
8. |
ஈத்துஉவக்கும்
இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்? |
 |
|
9. |
இரத்தலின்
இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். |
 |
|
10. |
சாதலின் இன்னாது
இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |