Thirukkural
25. அருளுடைமை திருக்குறள்  
1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்: பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
2. நல்லாற்றான் நாடி அருளாள்க: பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.
3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
4. மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்லென்ப
தன்உயிர் அஞ்சும் வினை.
5. அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.
6. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்.
7. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
8. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.
9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செயயும் அறம்.
10. வலியார்முன் தன்னை நினைக்க,தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
  திருக்குறள் - தொகுப்பு