|
26.
புலால் மறுத்தல் -
திருக்குறள்
|
|
| 1. |
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்? |
 |
|
2. |
பொருள்ஆட்சி
போற்றாதார்க்கு இல்லை: அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. |
 |
|
3. |
படைகொண்டார்
நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். |
 |
|
4. |
அருளல்லது
யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல். |
 |
|
5. |
உண்ணாமை உள்ளது
உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. |
 |
|
6. |
தினல்பொருட்டால்
கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். |
 |
|
7. |
உண்ணாமை
வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின். |
 |
|
8. |
செயிரின்
தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண். |
 |
|
9. |
அவிசொரிந்து
ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. |
 |
|
10. |
கொல்லான் புலாலை
மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |