|
27.
தவம் -
திருக்குறள்
|
|
| 1. |
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. |
 |
|
2. |
தவமும்
தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது. |
 |
|
3. |
துறந்தார்க்குத்
துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்? |
 |
|
4. |
ஒன்னார்த்
தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். |
 |
|
5. |
வேண்டிய
வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். |
 |
|
6. |
தவஞ்செய்வார்
தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு. |
 |
|
7. |
சுடச்சுடரும்
பொன்போல் ஔதவிடும் துன்பம்
சுடக்சுட நோற்கிற் பவர்க்கு. |
 |
|
8. |
தன்உயிர் தான்
அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும். |
 |
|
9. |
கூற்றம்
குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. |
 |
|
10. |
இலர்பலர் ஆகிய
காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |