|
29.
கள்ளாமை -
திருக்குறள்
|
|
| 1. |
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. |
 |
|
2. |
உள்ளத்தால்
உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். |
 |
|
3. |
களவினால் ஆகிய
ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும். |
 |
|
4. |
களவின்கண்
கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். |
 |
|
5. |
அருள்கருதி
அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். |
 |
|
6. |
அளவின்கண்
நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். |
 |
|
7. |
களவுஎன்னும்
காரறி வாண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். |
 |
|
8. |
அளவுஅறிந்தார்
நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. |
 |
|
9. |
அளவுஅல்ல
செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். |
 |
|
10. |
கள்வார்க்குத்
தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |