|
31.
வெகுளாமை -
திருக்குறள்
|
|
| 1. |
செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான்
அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்? |
 |
|
2. |
செல்லா இடத்துச்
சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. |
 |
|
3. |
மறத்தல்
வெகுளியை யார்மாட்டும்: தீய
பிறத்தல் அதனான் வரும். |
 |
|
4. |
நகையும்
உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற? |
 |
|
5. |
தன்னைத்தான்
காக்கின் சினம்காக்க: காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். |
 |
|
6. |
சினம்என்னும்
சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும். |
 |
|
7. |
சினத்தைப்
பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. |
 |
|
8. |
இணர்எரி
தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. |
 |
|
9. |
உள்ளியது
எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். |
 |
|
10. |
இறந்தார்
இறந்தார் அனையர்: சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |