|
32.
இன்னா செய்யாமை -
திருக்குறள்
|
|
| 1. |
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள். |
 |
|
2. |
கறுத்துஇன்னா
செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள். |
 |
|
3. |
செய்யாமல்
செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும். |
 |
|
4. |
இன்னாசெய் தாரை
ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். |
 |
|
5. |
அறிவினான்
ஆகுவது உண்டோ பிறதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை? |
 |
|
6. |
இன்னா எனத்தான்
உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். |
 |
|
7. |
எனைத்தானும்
எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணாசெய் யாமை தலை. |
 |
|
8. |
தன்உயிர்க்கு
இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்? |
 |
|
9. |
பிறர்க்கு இன்னா
முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். |
 |
|
10. |
நோய்எல்லாம்
நோய்செய்தார் மேலவாம்: நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |