|
33.
கொல்லாமை -
திருக்குறள்
|
|
| 1. |
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். |
 |
|
2. |
பகுத்துஉண்டு
பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. |
 |
|
3. |
ஒன்றாக நல்லது
கொல்லாமை: மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. |
 |
|
4. |
நல்லாறு
எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. |
 |
|
5. |
நிலைஅஞ்சி
நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. |
 |
|
6. |
கொல்லாமை
மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று. |
 |
|
7. |
தன்உயிர்
நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. |
 |
|
8. |
நன்றாகும்
ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. |
 |
|
9. |
கொலைவினையர்
ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. |
 |
|
10. |
உயிர்உடம்பின்
நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |