|
35.
துறவு -
திருக்குறள்
|
|
| 1. |
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். |
 |
|
2. |
வேண்டின்உண்
டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. |
 |
|
3. |
அடல்வேண்டும்
ஐந்தன் புலத்தை: விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. |
 |
|
4. |
இயல்பாகும்
நோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. |
 |
|
5. |
மற்றும்
தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை? |
 |
|
6. |
யான்எனது
என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். |
 |
|
7. |
பற்றி விடாஅ
இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. |
 |
|
8. |
தலைப்பட்டார்
தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். |
 |
|
9. |
பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும். |
 |
|
10. |
பற்றுக
பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |