|
36.
மெய்யுணர்தல் -
திருக்குறள்
|
|
| 1. |
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. |
 |
|
2. |
இருள்நீங்கி
இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசஅறு காட்சி யவர்க்கு. |
 |
|
3. |
ஐயத்தின்
நீங்கித் தௌதந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய உடைத்து. |
 |
|
4. |
ஐயுணர்வு
எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்உணர்வு இல்லா தவர்க்கு. |
 |
|
5. |
எப்பொருள்
எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. |
 |
|
6. |
கற்றுஈண்டு
மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி. |
 |
|
7. |
ஓர்த்துஉள்ளம்
உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. |
 |
|
8. |
பிறப்புஎன்னும்
பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு. |
 |
|
9. |
சார்புஉணர்ந்து
சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய். |
 |
|
10. |
காமம் வெகுளி
மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |