Thirukkural
37. அவா அறுத்தல்திருக்குறள்  
1. அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து.
2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை: மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.
3. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை:
யாண்டும் அஃதுஒப்பது இல்.
4. தூஉய்மை என்பது அவாவின்மை: மற்றுஅது
வாஅய்மை வேண்ட வரும்.
5. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
6. அஞ்சுவது ஓரும் அறனே: ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.
7. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.
8. அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
9. இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
10. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
  திருக்குறள் - தொகுப்பு