|
39.
இறைமாட்சி -
திருக்குறள்
|
|
| 1. |
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. |
 |
|
2. |
அஞ்சாமை ஈகை
அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. |
 |
|
3. |
தூங்காமை கல்வி
துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. |
 |
|
4. |
அறன்இழுக்காது
அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு. |
 |
|
5. |
இயற்றலும்
ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு. |
 |
|
6. |
காட்சிக்கு
எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். |
 |
|
7. |
இன்சொலால்
ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் வுலகு. |
 |
|
8. |
முறைசெய்து
காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும். |
 |
|
9. |
செவிகைப்பச்
சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. |
 |
|
10. |
கொடைஅளி
செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையான்ஆம் வேந்தர்க்கு ஔத. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |