|
40.
கல்வி -
திருக்குறள்
|
|
| 1. |
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. |
 |
|
2. |
எண்என்ப ஏனை
எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. |
 |
|
3. |
கண்உடையர்
என்பவர் கற்றோர்: முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர். |
 |
|
4. |
உவப்பத்
தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். |
 |
|
5. |
உடையார்முன்
இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். |
 |
|
6. |
தொட்டனைத்து
ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு. |
 |
|
7. |
யாதானும்
நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. |
 |
|
8. |
ஒருமைக்கண்
தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. |
 |
|
9. |
தாம்இன் புறுவது
உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். |
 |
|
10. |
கேடுஇல்
விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |