|
41.
கல்லாமை -
திருக்குறள்
|
|
| 1. |
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல். |
 |
|
2. |
கல்லாதான்
சொல்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. |
 |
|
3. |
கல்லா தவரும்
நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின். |
 |
|
4. |
கல்லாதான்
ஓட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுஉடை யார். |
 |
|
5. |
கல்லா ஒருவன்
தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். |
 |
|
6. |
உளர்என்னும்
மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர். |
 |
|
7. |
நுண்மாண்
நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. |
 |
|
8. |
நல்லார்கண்
பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. |
 |
|
9. |
மேல்பிறந்தார்
ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. |
 |
|
10. |
விலங்கொடு
மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |