|
42.
கேள்வி -
திருக்குறள்
|
|
| 1. |
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. |
 |
|
2. |
செவிக்குணவு
இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். |
 |
|
3. |
செவிஉணவிற்
கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து. |
 |
|
4. |
கற்றிலன்
ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. |
 |
|
5. |
இழுக்கல்
உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். |
 |
|
6. |
எனைத்தானும்
நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். |
 |
|
7. |
பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார்
இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். |
 |
|
8. |
கேட்பினுங்
கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. |
 |
|
9. |
நுணங்கிய
கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. |
 |
|
10. |
செவியின்
சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்? |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |