|
44.
குற்றங்கடிதல் -
திருக்குறள்
|
|
| 1. |
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. |
 |
|
2. |
இவறலும்
மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. |
 |
|
3. |
தினைத்துணையாம்
குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். |
 |
|
4. |
குற்றமே காக்க
பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை. |
 |
|
5. |
வருமுன்னர்க்
காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். |
 |
|
6. |
தன்குற்றம்
நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு? |
 |
|
7. |
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும். |
 |
|
8. |
பற்றுள்ளம்
என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று. |
 |
|
9. |
வியவற்க
எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. |
 |
|
10. |
காதல காதல்
அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |