|
49.
காலமறிதல் -
திருக்குறள்
|
|
| 1. |
பகல்வெல்லும் கூகையைக் காக்கை: இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. |
 |
|
2. |
பருவத்தோடு
ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு. |
 |
|
3. |
அருவினை என்ப
உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்? |
 |
|
4. |
ஞாலம் கருதினும்
கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின். |
 |
|
5. |
காலம் கருதி
இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். |
 |
|
6. |
ஊக்கம் உடையான்
ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து. |
 |
|
7. |
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஔளி யவர். |
 |
|
8. |
செறுநரைக்
காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. |
 |
|
9. |
எய்தற்கு அரியது
இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல். |
 |
|
10. |
கொக்குஒக்க
கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |