|
52.
தெரிந்து வினையாடல் -
திருக்குறள்
|
|
| 1. |
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். |
 |
|
2. |
வாரி பெருக்கி
வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. |
 |
|
3. |
அன்புஅறிவு
தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. |
 |
|
4. |
எனைவகையான்
தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறுஆகும் மாந்தர் பலர். |
 |
|
5. |
அறிந்துஆற்றிச்
செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற் றன்று. |
 |
|
6. |
செய்வானை நாடி
வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். |
 |
|
7. |
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல். |
 |
|
8. |
வினைக்குஉரிமை
நாடிய பின்றை அவனை
அதற்குஉரிய னாகச் செயல். |
 |
|
9. |
வினைக்கண்
வினையுடையான் கேண்மைவேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு. |
 |
|
10. |
நாள்தோறும்
நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |