|
54.
பொச்சாவாமை -
திருக்குறள்
|
|
| 1. |
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு. |
 |
|
2. |
பொச்சாப்புக்
கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. |
 |
|
3. |
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. |
 |
|
4. |
அச்ச
முடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. |
 |
|
5. |
முன்னுறக்
காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும். |
 |
|
6. |
இழுக்காமை
யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல். |
 |
|
7. |
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். |
 |
|
8. |
புகழ்ந்தவை
போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். |
 |
|
9. |
இகழ்ச்சியின்
கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. |
 |
|
10. |
உள்ளியது எய்தல்
எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |