|
55.
செங்கோன்மை -
திருக்குறள்
|
|
| 1. |
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின். |
 |
|
2. |
வான்நோக்கி
வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி. |
 |
|
3. |
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். |
 |
|
4. |
குடிதழீஇக்
கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. |
 |
|
5. |
இயல்புளிக்
கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. |
 |
|
6. |
வேல்அன்று
வென்றி தருவது: மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின். |
 |
|
7. |
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். |
 |
|
8. |
எண்பதத்தான் ஓரா
முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். |
 |
|
9. |
குடிபுறங்
காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில். |
 |
|
10. |
கொலையிற்
கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |