|
58.
கண்ணோட்டம் -
திருக்குறள்
|
|
| 1. |
கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு. |
 |
|
2. |
கண்ணோட்டத்து
உள்ளது உலகியல்; அஃதிலார்
உன்மை நிலக்குப் பொறை. |
 |
|
3. |
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல
கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்? |
 |
|
4. |
உளபோல்
முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணேட்டம் இல்லாத கண்? |
 |
|
5. |
கண்ணிற்கு
அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். |
 |
|
6. |
மண்ணோடு இயைந்த
மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர். |
 |
|
7. |
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர், கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். |
 |
|
8. |
கருமம்
சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு. |
 |
|
9. |
ஒறுத்துஆற்றும்
பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை. |
 |
|
10. |
பெயக்கண்டும்
நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |