|
61.
மடியின்மை -
திருக்குறள்
|
|
| 1. |
குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசுஊர மாய்ந்து கெடும். |
 |
|
2. |
மடியை மடியா
ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். |
 |
|
3. |
மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. |
 |
|
4. |
குடிமடிந்து
குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. |
 |
|
5. |
நெடுநீர் மறவி
மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். |
 |
|
6. |
படியுடையார்
பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. |
 |
|
7. |
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். |
 |
|
8. |
மடிமை
குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். |
 |
|
9. |
குடிஆண்மை
யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும். |
 |
|
10. |
மடிஇலா மன்னவன்
எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |