|
62.
ஆள்வினையுடைமை -
திருக்குறள்
|
|
| 1. |
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். |
 |
|
2. |
வினைக்கண்
வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. |
 |
|
3. |
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு. |
 |
|
4. |
தாளாண்மை
இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாள்ஆண்மை போலக் கெடும். |
 |
|
5. |
இன்பம் விழையான்
வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்துஊன்றும் தூண். |
 |
|
6. |
முயற்சி
திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். |
 |
|
7. |
மடியுளாள் மாமுகடி என்ப மடிஇலான்
தாள்உளாள் தாமரையி னாள். |
 |
|
8. |
பொறிஇன்மை
யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி. |
 |
|
9. |
தெய்வத்தான்
ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். |
 |
|
10. |
ஊழையும்
உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |