|
63.
இடுக்கணழியாமை -
திருக்குறள்
|
|
| 1. |
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். |
 |
|
2. |
வெள்ளத்து அனைய
இடும்பை அறிவுஉடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். |
 |
|
3. |
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். |
 |
|
4. |
மடுத்தவாய்
எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. |
 |
|
5. |
அடுக்கி வரினும்
அழிவுஇலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும். |
 |
|
6. |
அற்றேம்என்று
அல்லல் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்? |
 |
|
7. |
இலக்கம் உடம்புஇடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். |
 |
|
8. |
இன்பம் விழையான்
இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன். |
 |
|
9. |
இன்பத்துள்
இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். |
 |
|
10. |
இன்னாமை இன்பம்
எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |