|
65.
சொல்வன்மை -
திருக்குறள்
|
|
| 1. |
நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. |
 |
|
2. |
ஆக்கமும் கேடும்
அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. |
 |
|
3. |
கேட்டார்ப் பிணிக்குந் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல். |
 |
|
4. |
திறன்அறிந்து
சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊங்கு இல். |
 |
|
5. |
சொல்லுக
சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. |
 |
|
6. |
வேட்பத்தாம்
சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசுஅற்றார் கோள். |
 |
|
7. |
சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. |
 |
|
8. |
விரைந்து
தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். |
 |
|
9. |
பலசொல்லக்
காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். |
 |
|
10. |
இணர்ஊழ்த்தும்
நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துஉரையா தார். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |