|
66.
வினைத்தூய்மை -
திருக்குறள்
|
|
| 1. |
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும். |
 |
|
2. |
என்றும்
ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. |
 |
|
3. |
ஓஒதல் வேண்டும் ஔதமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். |
 |
|
4. |
இடுக்கண்
படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். |
 |
|
5. |
எற்றுஎன்று
இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று. |
 |
|
6. |
ஈன்றான்
பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. |
 |
|
7. |
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. |
 |
|
8. |
கடிந்த
கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். |
 |
|
9. |
அழக்கொண்ட
எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. |
 |
|
10. |
சலத்தால்
பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |