Thirukkural
68. வினைசெயல்வகை -  திருக்குறள்  
1. சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
2. தூங்குக தூங்கிச் செயற்பால: தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
3. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே: ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
4. வினைபகை என்றஇரண்டின் எச்சம் நினையும்கால்
தீஎச்சம் போலத் தெறும்.
5. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
6. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
7. செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
8. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
9. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
10. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
  திருக்குறள் - தொகுப்பு