|
69.
தூது -
திருக்குறள்
|
|
| 1. |
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்
பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு. |
 |
|
2. |
அன்புஅறிவு
ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. |
 |
|
3. |
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. |
 |
|
4. |
அறிவுஉரு
ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. |
 |
|
5. |
தொகச்சொல்லித்
தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது. |
 |
|
6. |
கற்றுக்கண்
அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. |
 |
|
7. |
கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை. |
 |
|
8. |
தூய்மை துணைமை
துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. |
 |
|
9. |
விடுமாற்றம்
வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன். |
 |
|
10. |
இறுதி
பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |