Thirukkural
70. மன்னரைச் சேர்ந்தொழுகல் -  திருக்குறள்  
1. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.
2. மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.
3. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
4. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
5. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
6. குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல
வேண்டுப வேட்பச் சொலல்.
7. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
8. இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஔதயோடு ஒழுகப் படும்.
9. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குற்ற காட்சி யவர்.
10. பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
  திருக்குறள் - தொகுப்பு