|
72.
அவையறிதல் -
திருக்குறள்
|
|
| 1. |
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர். |
 |
|
2. |
இடைதெரிந்து
நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். |
 |
|
3. |
அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். |
 |
|
4. |
ஓளியார்முன்
ஔளியர் ஆதல் வௌதயார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். |
 |
|
5. |
நன்றுஎன்ற
வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. |
 |
|
6. |
ஆற்றின்
நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. |
 |
|
7. |
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. |
 |
|
8. |
உணர்வது
உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. |
 |
|
9. |
புல்லவையுள்
பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார். |
 |
|
10. |
அங்கணத்துள்
உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |