Thirukkural
73. அவையஞ்சாமை -  திருக்குறள்  
1. வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
2. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
3. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
5. ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு.
6. வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு?
7. பகையகத்துப் பேடிகை ஔ஢வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
8. பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள்
நன்கு செலச்செல்லா தார்.
9. கல்லா தவரின் கடையென்ப கற்றுஅறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார்.
10. உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
  திருக்குறள் - தொகுப்பு