|
74.
நாடு -
திருக்குறள்
|
|
| 1. |
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்
செல்வரும் சேர்வது நாடு. |
 |
|
2. |
பெரும்பொருளால்
பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. |
 |
|
3. |
பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு. |
 |
|
4. |
உறுபசியும்
ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா இயல்வது நாடு. |
 |
|
5. |
பல்குழுவும்
பாழ்செயயும் உட்பகையும் வேந்துஅலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. |
 |
|
6. |
கேடுஅறியாக்
கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை. |
 |
|
7. |
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. |
 |
|
8. |
பிணியின்மை
செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து. |
 |
|
9. |
நாடுஎன்ப நாடா
வளத்தன: நாடுஅல்ல
நாட வளந்தரு நாடு. |
 |
|
10. |
ஆங்குஅமைவு
எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்துஅமை வில்லாத நாடு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |