|
75.
அரண் -
திருக்குறள்
|
|
| 1. |
ஆற்று பவர்க்கும் அரண்பொருள்: அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள். |
 |
|
2. |
மணிநீரும்
மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண். |
 |
|
3. |
உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல். |
 |
|
4. |
சிறுகாப்பின்
பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண். |
 |
|
5. |
கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்குஎளிதாம் நீரது அரண். |
 |
|
6. |
எல்லாப்
பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்
நல்ஆள் உடையது அரண். |
 |
|
7. |
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண். |
 |
|
8. |
முற்றுஆற்றி
முற்றி யவரையும் பற்றுஆற்றிப்
பற்றியார் வெல்வது அரண். |
 |
|
9. |
முனைமுகத்து
மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண். |
 |
|
10. |
எனைமாட்சித்து
ஆகிய கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |