|
76.
பொருள் செயல்வகை -
திருக்குறள்
|
|
| 1. |
பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள். |
 |
|
2. |
இல்லாரை
எல்லோரும் எள்ளுவர்: செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. |
 |
|
3. |
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. |
 |
|
4. |
அறன்ஈனும்
இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள். |
 |
|
5. |
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரள விடல். |
 |
|
6. |
உறுபொருளும்
உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். |
 |
|
7. |
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு. |
 |
|
8. |
குன்றுஏறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை. |
 |
|
9. |
செய்க பொருளை:
செறுநர் செருக்கறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல். |
 |
|
10. |
ஒண்பொருள்
காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |