|
77.
படைமாட்சி -
திருக்குறள்
|
|
| 1. |
உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. |
 |
|
2. |
உலைவுஇடத்து
ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது. |
 |
|
3. |
ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை?
நாகம் உயிர்ப்பக் கெடும். |
 |
|
4. |
அழிவுஇன்று
அறைபோகாது ஆகி வழிவந்த
வன்க ணதுவே படை. |
 |
|
5. |
கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. |
 |
|
6. |
மறம்மானம்
மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. |
 |
|
7. |
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. |
 |
|
8. |
அடல்தகையும்
ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். |
 |
|
9. |
சிறுமையும்
செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. |
 |
|
10. |
நிலைமக்கள் சால
உடைத்துஎனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |