Thirukkural
78. படைச்செருக்கு -  திருக்குறள்  
1. என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் ! பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்!
2. கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
3. பேராண்மை என்ப தறுகண்:ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
4. கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
5. விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
6. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
7. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
8. உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.
9. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்?
10. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
  திருக்குறள் - தொகுப்பு