|
79.
நட்பு -
திருக்குறள்
|
|
| 1. |
செயற்குஅரிய யாவுள நட்பின்? அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு? |
 |
|
2. |
நிறைநீர நீரவர்
கேண்மை பிறை:மதிப்
பின்நீர பேதையார் நட்பு. |
 |
|
3. |
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. |
 |
|
4. |
நகுதல்
பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு. |
 |
|
5. |
புணர்ச்சி பழகுதல் வேண்டா: உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும். |
 |
|
6. |
முகம்நக நட்பது
நட்பன்று: நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு. |
 |
|
7. |
அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. |
 |
|
8. |
உடுக்கை
இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு. |
 |
|
9. |
நட்பிற்கு
வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. |
 |
|
10. |
இனையர்
இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |