|
81.
பழைமை -
திருக்குறள்
|
|
| 1. |
பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. |
 |
|
2. |
நட்பிற்கு
உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு
உப்புஆதல் சான்றோர் கடன். |
 |
|
3. |
பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை? |
 |
|
4. |
விழைதகையான்
வேண்டி இருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின். |
 |
|
5. |
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின். |
 |
|
6. |
எல்லைக்கண்
நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. |
 |
|
7. |
அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். |
 |
|
8. |
கேள்இழுக்கம்
கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின். |
 |
|
9. |
கெடாஅ வழிவந்த
கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. |
 |
|
10. |
விழையார்
விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |