|
82.
தீநட்பு -
திருக்குறள்
|
|
| 1. |
பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது. |
 |
|
2. |
உறின்நட்டு
அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்? |
 |
|
3. |
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். |
 |
|
4. |
அமரகத்து
ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. |
 |
|
5. |
செய்துஏமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. |
 |
|
6. |
பேதை
பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்
ஏதின்மை கோடி உறும். |
 |
|
7. |
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்துஅடுத்த கோடி உறும். |
 |
|
8. |
ஒல்லும் கருமம்
உடற்று பவர்கேண்மை
சொல்ஆடார் சோர விடல். |
 |
|
9. |
கனவினும்
இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. |
 |
|
10. |
எனைத்தும்
குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |