|
83.
கூடாநட்பு -
திருக்குறள்
|
|
| 1. |
சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. |
 |
|
2. |
இனம்போன்று
இனம்அல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். |
 |
|
3. |
பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது. |
 |
|
4. |
முகத்தின் இனிய
நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும். |
 |
|
5. |
மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. |
 |
|
6. |
நட்டார்போல்
நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். |
 |
|
7. |
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். |
 |
|
8. |
தொழுதகை உள்ளும்
படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. |
 |
|
9. |
மிகச்செய்து
தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லல் பாற்று. |
 |
|
10. |
பகைநட்பாம்
காலம் வருங்கால் முகம்நட்டு
அகம்நட்பு ஒரீஇ விடல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |