|
84.
பேதைமை -
திருக்குறள்
|
|
| 1. |
பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். |
 |
|
2. |
பேதைமையுள்
எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல். |
 |
|
3. |
நாணாமை நாடாமை நார்இன்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். |
 |
|
4. |
ஓதி உணர்ந்தும்
பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல். |
 |
|
5. |
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு. |
 |
|
6. |
பொய்படும் ஒன்றோ
புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேல் கொளின். |
 |
|
7. |
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை. |
 |
|
8. |
மையல் ஒருவன்
களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின். |
 |
|
9. |
பெரிதுஇனிது
பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதுஒன்று இல். |
 |
|
10. |
கழாஅக்கால்
பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |