|
85.
புல்லறிவாண்மை -
திருக்குறள்
|
|
| 1. |
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு. |
 |
|
2. |
அறிவிலான்
நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம். |
 |
|
3. |
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. |
 |
|
4. |
வெண்மை
எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. |
 |
|
5. |
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும். |
 |
|
6. |
அற்றம் மறைத்தலோ
புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. |
 |
|
7. |
அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. |
 |
|
8. |
ஏவவும்
செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய். |
 |
|
9. |
காணாதான்
காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டான்ஆம் தான்கண்ட வாறு. |
 |
|
10. |
உலகத்தார்
உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |