|
86.
இகல் -
திருக்குறள்
|
|
| 1. |
இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய். |
 |
|
2. |
பகல்கருதிப்
பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. |
 |
|
3. |
இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும். |
 |
|
4. |
இன்பத்துள்
இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். |
 |
|
5. |
இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே
மிகல்ஊக்கும் தன்மை யவர். |
 |
|
6. |
இகலின்
மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. |
 |
|
7. |
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். |
 |
|
8. |
இகலிற்கு
எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. |
 |
|
9. |
இகல்காணான்
ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. |
 |
|
10. |
இகலான்ஆம்
இன்னாத எல்லாம் நகலான்ஆம்
நல்நயம் என்னும் செருக்கு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |