HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
92. வரைவின் மகளிர் -  திருக்குறள்  
1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
2. பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்பில் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
3. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.
4. பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
5. பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
6. தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
7. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின்
பேணிப் புணர்பவர் தோள்.
8. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப
மாய மகளிர் முயக்கு.
9. வரைவுஇலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
10. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
  திருக்குறள் - தொகுப்பு