HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
94. சூது -  திருக்குறள்  
1. வேண்டற்க வென்றிடினும் சூதினை: வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.
2. ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு.
3. உருள்ஆயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
4. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்.
5. கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
6. அகடுஆரார் அல்லல் உழப்பர் சூதுஎன்னும்
முகடியால் மூடப்பட் டார்.
7. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
8. பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
9. உடைசெல்வம் ஊண்ஔத கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.
10. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
  திருக்குறள் - தொகுப்பு